பிரேரணையை திருத்த விருந்து கொடுத்த அரச தரப்பு!

ஆசிரியர் - Admin
பிரேரணையை திருத்த விருந்து கொடுத்த அரச தரப்பு!

இலங்கை தொடர்பாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான முயற்சிகளில், இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவா சென்றுள்ள அரச தரப்பு பிரதிநிதிகளான வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் நேற்று பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். 

உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் விருந்துபசாரம் ஒன்றுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இதன்போதே பிரேரணையில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு