ஜனாதிபதியின் அனுமதியின்றியே இணை அனுசரணை!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதியின் அனுமதியின்றியே இணை அனுசரணை!

இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரிட்டன் கொண்டு வர இருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை. ஜனாதிபதியின் அனுமதியின்றி இணைஅனுசரணை வழங்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜெனீவாவில் உள்ள இலங்கை அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சு அன்றி வேறு நபர்களே உத்தரவுகள் வழங்குவதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் இத்தகைய நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது தொழில் முயற்சி,கண்டி மரபுரிமை, கண்டி அபிவிருத்தி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞான,தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமெரிக்காவுடன் இலங்கை இணை அனுசரணை வழங்கியது. யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதியின்றி இவ்வாறு இணை அனுசரணை வழங்க முடியாது இணை அனுசரணைக்கு அன்று ஜனாதிபதி அனுமதி வழங்கியிருக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை தயாராகிறது. ஆனால் இதற்கு ஜனாதிபதி எந்த அனுமதியும் வழங்கவில்லை.

ஈராக்கில் பிரிட்டன் அப்பாவி மக்களை கொலை செய்தது. எமது படை வேறு நாடுகளுக்குச் சென்று இவ்வாறு கொலைகளில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தான் பிரிட்டன் இலங்கை தொடர்பில் பிரேரணை கொண்டுவரத் தயாராகியது.

தற்பொழுது வெளிவிவகார அமைச்சு தொடர்பான முடிவுகள் நிதி அமைச்சிலிருந்தே எடுக்கப்படுகிறது. அமைச்சருக்கோ செயலாளருக்கோ அவை தொடர்பில் எதுவும் தெரியாது. முன்பு அமைச்சர் இருக்கையில் சஜின்வாஸ் குணவர்தன தான் சகல அதிகாரங்களுடனும் செயற்பட்டார். இன்றும் அதே போன்ற நிலைமையே காணப்படுகிறது.

இணை அனுசரணை வழங்கி எமது படையினரை காட்டிக் கொடுக்க முயற்சி நடைபெறுகிறது. டொலர்களுக்காக செயற்படும் அரச சார்பற்ற நிறுவன காகங்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன. மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணை அறிக்கையை நிராகரிப்பதாக கூறியுள்ளனர். நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காக அன்றி நாட்டை பாதுகாப்பதற்குத் தான் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ நாட்டை சீன கடன்சுமைக்குள் புதைத்தார். இந்த அரசு நாட்டை சீன கொலனியாக நாட்டை மாற்றி வருகிறது. ஹம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்க அரசு தயாராகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு