நீதியை மறுக்கும் செயற்திட்டத்துக்கு வடக்கு ஆளுநரை பயன்படுத்துகிறது அரசாங்கம்! - அனந்தி குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
நீதியை மறுக்கும் செயற்திட்டத்துக்கு வடக்கு ஆளுநரை பயன்படுத்துகிறது அரசாங்கம்! - அனந்தி குற்றச்சாட்டு

தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய வடக்கு மாகாண ஆளுநர், ஐ.நாவில் எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையை எடுத்துரைப்பார் என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில், இதுவரையில் எதையும் செயற்படுத்தாத நிலையில் மேலும் கால அவகாசம் கோரியிருக்கிறது. அதையும் ஐ.நா. வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இந்த விடயத்தில் மிக இராஜதந்திரமான முறையில் அரசாங்கம் செயற்படுகின்றது. அந்த அடிப்படையிலேயே வடக்கிற்கு புதிதாக தமிழர் ஒருவரை நியமித்து அவரை ஐ.நா.விற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. 

வடக்கு மாகாண ஆளுநரை ஐ.நா.விற்கு அனுப்புவதன் மூலம் நீதி மறுக்கப்படும் செயற்திட்டத்திற்கு அவரை அரசாங்கம் பயன்படுத்துகிறது” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு