SuperTopAds

ஒரே குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்ட நபருக்கு தண்டப்பணம்

ஆசிரியர் - Editor II
ஒரே குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்ட நபருக்கு தண்டப்பணம்

கிளிநொச்சி - நாச்சிக்குடா பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் உள்ள மதுபானத்தினை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டாவது தடவையாக கைது செய்யப்பட்டவருக்கு 20,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாச்சிக்குடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் கொண்ட மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினூடாக தண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அவர் மீளவும் அரச சீல் கொண்ட மதுபானத்தை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாச்சிக்குடா பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர்.