SuperTopAds

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்ககோாி கேப்பாபிலவில் வாகன பேரணி..

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்ககோாி கேப்பாபிலவில் வாகன பேரணி..

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களின் காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கக் கோாி இன்று வாகன பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

இன்றுடன் 727 ஆவது நாளாகத் தொடர்ந்து போராடிவரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த வாகளப் பேரணி 

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அங்கே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும்  கை யெழுத்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு  

மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்து ழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 

"காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் " எனும்  பெயரில் இந்த வாகன  பேரணியும்  கையெழுத் து சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது .

இன்று ஆரம்பித்த இந்த பேரணி வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளில் 

கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு போராடடம் ஒன்றை மேற்கொண்டு பின்னர் மன்னாரை சென்றடைந்து 

பின்பு வவுனியா ,நீர்கொழும்பு என சென்று எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் நிறைவடைவதோடு அன்றையதினம்

பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் கொழும்பில் இடம்பெறவுள்ளது . இன்றைய இந்த போராடடத்தை பெருமளவிலான புலனாய்வாளர்கள் 

மற்றும் பொலிஸார் புகைப்படங்களையும் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கியில் ஈடுபட்டிருந்தனர்.