SuperTopAds

முல்லைத்தீவு சிலாவத்தையில் குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

ஆசிரியர் - Editor II
முல்லைத்தீவு சிலாவத்தையில் குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிக்கிராம பகுதியில் குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(03) காலை இடம்பெற்றது.

சிலாவத்தை மாதிரி கிராமத்தில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தாயான 37 அகவையுடைய தமிழ்ச்செல்வன் ஞானேஸ்வரி என்ற குடும்ப பெண்ணே இன்று(03) காலை வீட்டின் பின்புறம் உள்ள தற்காலிக வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீஸார் உடலத்தை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

மாவட்ட மருத்துவமனையில் சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த குடும்ப பெண்ணின் தற்கொலை தொடர்பில் பெண்ணின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த தற்கொலை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.