வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகிறதா? 9 பில்லியன் ரூபாய் செலவிட உத்தேசம்..
வடகிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் கொக்கிளாய்- புல்மோட்டை பகுதிகளை இணைக்கும் பாலம் 9 பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான தீவி ர முயற்சிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியி ருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் உடன் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட் டையினை இணைக்கும் இறங்குதுறையினை இணைத்து ஒரு கிலோமீட்டர் நீளமான பாலம் ஒன்று அமையவிருக்கின்றது. இந்த பாலம் அமைக்கப்படுமானால் முல்லைத்தீவு திருகோணம லைக்கான
பிரயாணத் தூரம் நூறு கிலோமீற்றர்களால் குறையும் என எதிரபார்க்ப்படுகின்றது. இந்த இரு மாவட்டங்களையும் இணைப்பதன் முக்கியத்துவம்கருதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் அவர்கள் மேற்கொண்ட பெருமுயற்சியின் பயனாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது.
செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களு க்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார். 9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான,
நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன.