யாழ்.மாநகர முதல்வா் மீதான சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வா் மீதான சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்..

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட், சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுமீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சீராய்வு மனுவின் பிரதிவாதிகள் முறையே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர், மாநகர முதல்வர் இ.ஆர்னல்ட் , மாநகர ஆணையாளர் ஜே.ஜெயசீலன்  ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுவை வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன 

என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை ஜனவரி மாத முற்பகுதியில் அகற்றப்பட்டன. இது தொடர்பில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு 

எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியது.  அந்த முறைப் பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் பொலிஸ் நிலையத்தில் முற்படவில்லை என்று தெரிவித்து 

அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கடந்த மாதம் 17ஆம் திகதி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இருவரையும் கடந்த   21ஆம் திகதி  நீதிமன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளை அனுப்ப உத்தரவிட்டார்.

வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மாநகர ஆணையாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். ஆணையாளர் சார்பில் மூத்த சட்டத்தரணி இராஜரட்ணமும் 

முதல்வரின் சார்பில் சட்டத்தரணிகள் ஜொனி மதுரநாயகம், கணாதீபன் உள்ளிட்டவர்களும் முன்னிலையாகினர். முறைப்பாட்டாளர்களின் நலன்சார்பில் பெரும்பான்மையின சட்டத்தரணியுடன் சட்டத்தரணி ரஞ்சித்குமாரும் முன்னிலையாகினர். 

யாழ்ப்பாணம் மாநகர முதல்வரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். "மாநகர சபை எல்லையில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்ட கம்பங்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் 

கீழ் முதல்வருக்கும் ஆணையாளருக்கும் அதிகாரம் உண்டு.  அவர்களால் அகற்றப்பட்ட கம்பங்கள் தொடர்பில் குற்றவியல் வழக்கின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு ஏற்பாடுகள் இல்லை. 

எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி. போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட்  மற்றும் ஆணையாளர் இருவரையும் 

குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.  இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து கேபிள் சேவை வழங்கும் நிறுவனத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு 

மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த்து. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ஜே.டி.ஏ. ரஞ்சித்குமாரின் ஏற்பாட்டில் 

ஜனாதிபதி சட்டத்தரணி சானுக ரணசிங்க முன்னிலையாகி பூர்வாங்க சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார். பொலிஸார் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்த போது முரண்பாடாக சட்ட ஏற்பாடுகளை மாறி மாறி பயன்படுத்தியுள்ளனர். 

எனவே சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டு எதிர்மனுதாரர்களுக்கு அறிவித்த அனுப்ப மன்று கட்டளையிடவேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சானுக ரணசிங்க மன்றுரைத்தா ர். மனுதாரரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், 

பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு