சாவகச்சோியில் தனியாா் நிறுவனம் ஒன்றுக்குள் வளா்க்கப்பட்ட கஞ்சா செடி, மோப்பம் பிடித்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor
சாவகச்சோியில் தனியாா் நிறுவனம் ஒன்றுக்குள் வளா்க்கப்பட்ட கஞ்சா செடி, மோப்பம் பிடித்த பொலிஸாா்..

சாவகச்சோியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் வளா்க்கப்பட்ட கஞ்சா செடி பொலிஸாாினால் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை வளா்த்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, குறித்த தனியாா் நிறுவனத்திற்குள் கஞ்சா செடி வளா்க்கப்படு வது தொடா்பாக சாவகச்சோி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து குறித்த தனியாா் நிறுவனத்திற்கு இன்று சென்ற பொலிஸாா் அதனை சோதனையிட்டபோது உண்மையி லேயே கஞ்சா செடி வளா்க்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 

அதனை வளா்த்த 35 வயதான நபரை கைது செய்துள்ளதுடன், கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா். இதேவேளை கைது செய்யப்பட்ட நகா் அம்பாறை மாவட்டத்தை சோ்ந்தவா் என பொலிஸாா் கூறுகின்றனா். 

Radio
×