யாழ்.ஆாிய குளத்தை பாதுகாக்க யாழ்.மாநகரசபை இணக்கம், உடனடி நடவடிக்கைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆாிய குளத்தை பாதுகாக்க யாழ்.மாநகரசபை இணக்கம், உடனடி நடவடிக்கைகள் தீவிரம்..

யாழ்.நகாில் உள்ள ஆாிய குளத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு கருதி குளத்தை துப்புரவு செய்து யாழ்.மாநகரசபையின் ஆழுகைக்குள் கொண்டுவரவேண்டும். என யாழ்.மாநகரசபை உ றுப்பினா் ந.லோக தயாளன் கோாிக்கை விடுத்துள்ளாா். 

இந்த கோாிக்கை சபையினால் அங்கீகாிக்கப்பட்டு குளத்தை துப்புரவு செய்ய சபை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும், அதற்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் மாநகர முதல் வா் இ.ஆனோல்ட் சபையிலேயே கூறியிருக்கின்றாா். 

இது குறித்து சபையில் மேலும் பேசப்படுகையில், யாழ்.நகரின் மத்தியில் உள்ள ஆரியகுளத்தின் அருகே பாதுகாப்பு கடவை அமைத்து அப் பகுதி சுத்தமாக பராமரிக்கப்படுவதோடு அப் பகுதியி ல் ஏனைய தலையீடுகள் இடம்பெறாத வண்ணம் சபை உறுதிப்படுத்த வேண்டும். 

ஏனெனில் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ள அக் குளத்மினை அழகுபடுத்தி பாதுகாப்பு வேலி அமைத்து குடாநாட்டில் உள்ள முக்கிய சுற்றாடல் மையங்களின் படங்களை அழகு படுத்த முடியும். இதன் மூலம் நகரும் சுத்தமாகவும், 

அழகாகவும் இருப்பதோடு வேண்டத்தகாத தலையீடுகளும தவிர்க்க முடியும். என்றார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய மாநகர முதல்வர் இ.ஆனல்ட் அக் குளமானது எமது சபையின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனவே உடனடியாக பொறியியலாளர் 

அக் குழத்தை அழகுபனுத்தி பாதுகாப்பதற்கு நேரில் பார்வையிட்டு திட்டத்தை சம்ப்பிக்க வேண் டும். இதனை திங்கட்கிழமை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு