அரச காணியில் குடியிருந்த குற்றத்துக்காக அரச அதிகாாிகளால் அச்சுறுத்தப்படும் பொதுமகன், வீடு புகுந்து அரச அதிகாாிகள் அடாவடி..

ஆசிரியர் - Editor I
அரச காணியில் குடியிருந்த குற்றத்துக்காக அரச அதிகாாிகளால் அச்சுறுத்தப்படும் பொதுமகன், வீடு புகுந்து அரச அதிகாாிகள் அடாவடி..

கட்டைக்காடு கிராமத்தில் கடந்த நான்கு வருத்திற்க்கு முன்னர் யோகராசா றொசான்த் என்பவர் கிராம செயலாளர் ஊடாக பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்று அரச காணியில் குடியிருந்துள்ளார். 

அவர் மனைவி ஒரு பெண் குழந்தை உட்பட மூன்று அங்கத்ததவர்கொண்ட உடல் அங்கவீனமான முன்னாள் போராளி ஆவர்  தற்போது கட்டைக்காடு கிராமசேவையாளர் திரு.காந்தரூபன் உடனடியாக காணியையும் வீட்டையும் விட்டு எழும்புமாறு 

திடீரென முன்னர் குறித்த யோகராசா றொசாந்தன் என்பவரை மிரட்டியுள்ளார் இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் நேரில் சென்று ஐயா நீங்கள் தானே அக் காணியில் என்னை  இருக்க அனுமதி தந்தீர்கள் இப்போது கிராம சேவகர் 

என்னை காணியையும் வீட்டையும் விடடு எழும்புமாறு கூறுகிறார்.எனக் கேட்ட போது பிரதேச செயலர் தனது தொலைபேசியில் குறித்த கிராம சேவகருக்கு அழைப்பு ஏற்படுத்தியுள்ளார்.

அப்போது கிராம சேவகர் பிரதேச செயலருக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார்.தனக்கு அக் காணி வழங்குவது தொடர்பாக எந்தவித ஆட்சேபனையும் இல்லை ஆனால் அவருக்கும்  தனக்கும் தனிப்பட்ட முரண்பாடு உண்டு 

இதனாலேயே அக் காணியை வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். குறித்த காணியில் குடியிருக்கும் நபர் நான்கு வருடத்திற்க்கு முன்னரே தற்காலிக வீடு அமைத்து கிணறும் கட்டிக் கொண்டுள்ள நிலையிலேயே குறித்த காணியிலிருந்து எழும்புமாறு 

கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் அல்லும் பகலும் தமது காணியை பார்த்துக் கொண்டு சென்ற கிராம சேவகர் தற்போது காணியையும் வீட்டையும் விட்டு எழும்புமாறு கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் தாம் தனது பிள்ளை மற்றும் மனைவியுடன் 

எங்கே செல்வது என்றும் முன்னாள் போராளி தெரிவித்தார். அண்மையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஞானசீலன் டிகோனிங் என்பவரது காணிக்கும் பிரதேச செயலகத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிட தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு