இலங்கையில் சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை, கண்ணீா்தான் சிந்துகிறோம்..
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் இன் று 698 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.
இன்னிலையில் இலங்கையின் சுதந்திர நாளாக இன்று 04.02.19 தங்கள் சுதந்திர நாளினை கறுப்பு நாளாக நினைவிற்கொள்வதாக
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தங்கள் பிள்ளைகள்
எப்போது தங்களிடம் கிடைக்கின்றார்களோ அப்போதுதான் எங்களுக்கு சுதந்திரம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையின் சுநத்திர நாள் நாடுமுழுவதும் குறிப்பாக தெற்கிலும் கொண்டாடுகின்றார்கள் எங்கள் பிள்ளைகள் வந்தால்தான் எங்களுக்கான
சுதந்திரம் கிடைக்கும் அதுவரை இலங்கையின் சுதந்திரதினத்தினை புறக்கணிக்கின்றோம். என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் நினைத்தால் சுதந்திர தினத்தில் என்றாலும் எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்திருக்கலாம் அவர்கள் சுதந்திரத்தினை கொண்டாடுகின்றார்கள்
நாங்கள் கரிநாளாக கொண்டாடுகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.