பொதுக் காணியில் வேலி அமைத்தாரம், பொதுமகன் ஒருவாின் வேலியை அழித்து வடமராட்சி கிழக்கில் அரச ஊழியா் வெறியாட்டம்..

ஆசிரியர் - Editor I
பொதுக் காணியில் வேலி அமைத்தாரம், பொதுமகன் ஒருவாின் வேலியை அழித்து வடமராட்சி கிழக்கில் அரச ஊழியா் வெறியாட்டம்..

அரச காணியில் அனுமியின்றி குடியேறினார் என்று சீமெந்து தூண்களால் அடைத்த வேலியை அடித்து நொருக்கியும் முள்ளு கம்பியை வெட்டி துண்டாடிய சம்பவம் நேற்று முன்தினம் வடமா ராட்சி கிழக்கு கேவில் நிச்சியவெட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது. 

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவிட்டு இடப்பெயர்வு காரணமாக கொடி காமம் பகுதியில் தற்போது வசித்துவரும் தம்பன் இராசதுரை என்பவரது காணியே அவரது உறவுகளால் துப்பரவு செய்யப்பட்டு  சீமெந்து தூண் வேலிக்கு நிறுத்தப்பட்டு 

முள்கம்பியால் அடைக்கப்பட்ட வேலியே வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களால் சேதமாக்கப் பட்டுள்ளது.சீமெந்து தூண்கள் இடித்து முறிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பட்டு கம்பிகள் குறடால் வெட்டப்பட்டு துண்டாடப் பட்டுள்ளது. குறித்த காணிக்கு தம்மிடம் அனிமதி பத்திரம் உண்டு என்றும் இது 1790 காலப்பகுதியில் அரை ஏக்கர் வீதம் அனிமதி பத்திரம் வழங்கபட்டது 

என்றும் வடக்கு கிழக்கு  மற்றும் தெற்கு பக்கமாக பலர் குடியேறியுள்ள நிலையில் தம்மை மட்டும் இவ்வாறு மிரட்டுவதாக காணி உரித்துடையோர் என் கூறுவோர் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு சமுக ரீதியான பழிவாங்கல் என்றும் கூறப்படுகிறது இது தொடர்பாக காணொ உத்தியோகத்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த காணியை அடைத்தவர்கள் நீண்டகாலம் இங்கு வரவில்லை என்றும் 

தற்போது காணியை அடைத்துள்ளதாகவும் குறித்த பகுதியில் வசித்ததற்க்குரிய ஆதாரம் கேட்டபோது தனது பிள்ளைகள் பிறந்த சான்றிதழை மட்டும் காட்டியதாகவும் இது செல்லாது என்றும் 

கட்டைக்காடு முள்ளியான் பகுதிகளில் சட்டவிரோத காணிகள் பயன்பாடு அதிகரித்த வருவதாகவும் இதனால் தான் தாம் இவ்வாறு சீமெந்து தூண்களை அடித்து நொருக்கியதாகவும் முட்கம்பிகளை அறுத்து எறிந்ததாகவும் 

தெரிவித்ததுடன் சீமெந்து தூண்கள் முட் கம்பிகளை அறுத்து எறியும் அதிகாரம் உங்களுக்கு உண்டா என. கேட்டபோது நீதிமன்றம் ஊடாகவோ அல்லது இவ்வாறு அடித்து உடைக்கும் அதிகாரம் காணி 

வெளிக்கள உத்தியோகத்தருக்கு உண்டு என்றும் குறிப்பிட்டார்.இவ்வாறு பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களால் ஒரு வருடத்திற்கு முன்பாக அம்பன் பகுதியில் மூவரது உறுதி  காணியில் நிறுத்தப்பட்ட 

சீமெந்து தூண்கள் மற்றும் முட்கம்பிகள் அறுத்து வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு