குப்பை மேடாக மாறிவரும் வல்லிபுரம் மாவடி சந்தி, பிரதேசசபை அசண்டையீனம்..

ஆசிரியர் - Editor I
குப்பை மேடாக மாறிவரும் வல்லிபுரம் மாவடி சந்தி, பிரதேசசபை அசண்டையீனம்..

பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட வல்லிபுரம் மாவடி சந்தியை அண்மித்த பகுதிகளில் பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நகர சபை பொது மக்கள் என அனைவரும் பாதுகாப்பின்றி கழிவுகளை கொட்டி வருகின்றனர். 

இதனால் அப்பிரதேசம் துர் நாற்றம் வீசுவதுடன் பொலித்தீன் கழிவுகள் அனைத்தும் காற்றிற்கு சிதறியும் காணப்படுகிறது இதேவேளை அப்பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளிலிருந்து உணவுகளை பெறுவதற்காகா நூற்றுக்கு மேற்பட்ட தெரு நாய்கள் தங்குமிடமாகவும் காணப்படுகிறது.

இந்த தெருநாய்கள் வீதியால் செல்பவர்கள் துரத்திச் செல்கின்றன இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டி ஆகியவற்றில் செல்வோர்கள் பல கஸ்டங்களை எதிர் நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நகர சபை என்பன இணைந்தே கழிவுகளை அகற்றி வருகின்றன ஆனால் அவை பதுகாப்பாக அகற்றப்படுவதில்லை எனவும் கழிவு  அகற்றப்படிகின்ற கிறித்த இடம் மாரிகாலத்தில் நீர் தேங்குகின்ற இடமாகும் இதனால் நீரும் மாசடைந்து வருவதாக சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு