வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம்..

வலிகாமம் வடக்கில் தற்போதும் படையினர் வசமுள்ள நிலங்களில் விரைவில் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான விசேட சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குரும்பசிட்டி மற்றும் பலாலி வீதிக்கு கிழக்குத் பக்க காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு தெல்லிப்பளை, அச்சுவேலி வீதி விடுவிப்பின் சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இவை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

இதேநேரம் கடற்படையினர் வசமுள்ள கீரிமலைப் பிரதேசம் தொடர்பில் ஆரயப்பட்டவேளையில் அங்கே அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளட்ட பிரதேசத்தினை முழுமையாக விடுவித்து அதில் ஜனாதிபதி மாளிகையினை மட்டும் சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிப்பதற்கும் எஞ்சிய நிலத்தினை நிலத்தின் உரிமையாளர்களிடம் கையளிக்க முடியும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள , சுற்றுலா அதிகார சபையினர் , ஜனாதிபதி செயலக அதிகாரிகள் , படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு