அதுக்கும் இதுக்கும் சமந்தம் இல்லையாம், சப்புக்கட்டு கட்டும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
அதுக்கும் இதுக்கும் சமந்தம் இல்லையாம், சப்புக்கட்டு கட்டும் பொலிஸாா்..

போதைப் பொருள் வியாபாாிகள் தொடா்பான தகவலை வெளிப்படுத்தியதற்காக பாடசாலை மாணவன் மீது போதைப் பொருள் வியாபாாிகள் தாக்குதல் நடாத்தியிருக்கும் நிலையில், போதைப் பொருள் விற்பனையாளா்களை காட்டி கொடுத்ததற்கும், மாணவன் தாக்கப்பட்டதற் கும் சம்மந்தம் இல்லை. என சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபா் கூறியுள்ளாா். 

இது குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபா் இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போது, குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறித்த சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை திருப்பியதால் ஏற்ப ட்ட விபத்திலேயே இச் சிறுவன் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே தாக்கப்பட்டதாக முறை ப்பாடு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினருருக்கு கஞ்சா கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக பொது மக்களால் வழங் கப்படும் தகவல்கள் தொடர்பில் யாரிடமும் பகிரப்படாது எனவும் 

அது இரகசியமான முறையிலேயே பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த மாணவன் கஞ்சா தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே இத் தாக்குதல் நடாத் தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் இன்றைய தினம் இதனை கண்டித்து கிளி நொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு