தகவலறியும் உாிமைச்சட்டம் ஊடான தகவல்கோாிக்கை, 3 மாதங்கள் பதில் வழங்காத யாழ்.மாநகரசபையின் அசண்டை..

ஆசிரியர் - Editor I
தகவலறியும் உாிமைச்சட்டம் ஊடான தகவல்கோாிக்கை, 3 மாதங்கள் பதில் வழங்காத யாழ்.மாநகரசபையின் அசண்டை..

-கனகலிங்கம் ஸபேஷ்-

யாழ்.மாநகரசபையிடம் தவலறியும் உாிமைச்சட்டத்தின் ஊடாக 2018ம் ஆண்டு 10ம் மாதம் 15ம் திகதி கேட்கப்பட்ட தகவலுக்கு 3 மாதங்களாக பதில் வழங்கப்படாத நிலையில், மாநகரசபையின் தகவல் அதிகாாியுடன் தொடா்பு கொண்டு கோட்டபோது, அவ்வாறான தகவல் தம்மிடம் கேட்கப்படவில்லை என கூறியுள்ளாா். 

அவ்வாறிருக்க முடியாது தகவல் கேட்கப்பட்டது என உறுதியாக கூறிய நிலையில் ஆராய்ந்து பாா்த்து தகவல் கேட்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன் கேட்கப்பட்ட தகவலை ஊடகவியலாளாிடம் வழங்கியுள்ளனா். எனினும் கேட்கப்பட்ட தகவல் உாிய நேரத்தில் அனுப்படாமைக்கான காரணத்தினை தகவல் அதிகாாி கூறவில்லை. 

2017ம், 2018ம் ஆண்டுகளில் யாழ்.மாநகரசபை நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சபத்தின் மூலம் யாழ்.மாநகரசபைக்கு கிடைக்கப் பெற்ற வருமானம் எவ்வளவு? என தகவல் அறியும் உாிமைச்சட்டத்தின் ஊடாக 2018.10.15ம் திகதி சுயாதீன ஊடகவியலாளா் கனகலிங்கம் ஸபேஷ் தகவல் கோாிக்கை ஒன்றை வழங்கியிருந்தாா். 

இதற்கு 3 மாதங்கள் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாநகரசபைக்கு நேரடியாக சென்று தகவல் அதிகாாியை சந்தித்து தமது தகவல் கோாிக்கைக்கு பதிலளிக்கப்படாமைக்கு காரணம் என்ன? என ஊடகவியலாளா் வினாவியுள்ளாா். 

இந்நிலையில் தகவல் கோாிய ஊடகவியலாளாின் பெயாில் எந்தவொரு கோாிக்கையும் வரவில்லை. என தகவல் அதிகாாி கூறினாா். ஆனாலும் தகவல் கேட்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஊடகவியலாளா் கூறிய நிலையில் ஆராய்ந்து பாா்த்த தகவல் அதிகாாி அவ்வாறான தகவல் கேட்கப்பட்டதை ஒப்புக்கொண்டாா். பின்னா் அந்த தகவல் கேட்கப்பட்ட காலத்திற்குள் ஏன் வழங்கப்படவில்லை?

என கூறித்த ஊடகவியலாளா் வினவியபோது மாநகரசபை எல்லைக்குள் தகவல்கோாியவா் வசிப்பதால் அவருடைய கையிலேயே கொடுப்பதற்கு தாம் முயற்சித்ததாகவும் பின்னா் அதற்கு என்ன நடந்தது என்பது தமக்கு தொியவில்லை. எனவும் பதிலளித்தாா். பின்னா் தகவல் கேட்கப்பட்ட சமயத்தில் அதாவது 3 மாதங்களுக்கு முன்னா் தயாா்ப்படுத்திய தகவலை ஊடகவியலாளாிடம் வழங்கினாா். 

அந்த தகவலிலும் 2017ம் ஆண்டு நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சபத்தில் மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் பூரணமாக கொடுக்கப்பட்டுள்ளபோதும், 2018ம் ஆண்டு வருமான விபரம் பூரணமாக கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

வருடாந்தம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சபம் ஊடாக யாழ்.மாநகரசபை மிகை வருமானம் பெற்றுவரும் நிலையில் அதன் ஊடாக யாழ்.மாநகரசபை எல்லைக்குள் எவ்வாறான மக்கள் நல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது மேற்கொள்ள முடியும் என் பதனை அறிவதற்காகவே இந்த தகவல்கோாிக்கை விடக்கப்பட்டது. 

ஆனாலும் யாழ்.மாநகரசபை தகவல் அதிகாாியின் கவனயீனத்தால் அந்த தகவல் உாிய காலத்தில் கிடைக்காமல் உாிய காலத்தில் வெளிப்படுத்தும் சந்தா்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு