2350 மில்லியன் ரூபாய் செலவில் மீள கட்டியெழுப்பபடுகிறது யாழ்.மாநகரசபை கட்டிடம்..

ஆசிரியர் - Editor I
2350 மில்லியன் ரூபாய் செலவில் மீள கட்டியெழுப்பபடுகிறது யாழ்.மாநகரசபை கட்டிடம்..

அழிக்கப்பட்ட யாழ்.மாநகரசபை கட்டிடத்தை மீள கட்டுவதற்கு 2350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ம த்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனோல்ட் தொிவித்துள்ளாா். 

அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாநகரசபை கட்டடம் 1981ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் 27 ஆண்டுகளிற்குப் பின்னர், குறித்த கட்டடம் மீண்டும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

யாழ். மாநகரசபை கட்டடத்தைக் கட்டுவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சரவை கூட்டத்தில் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அமைச்சின் கீழ் 

மாநகரசபை கட்டடத்தை கட்ட 2350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் இருப்பில் இருக்கக்கூடிய 300 மில்லியன் ரூபாவை

மீதப்படுத்தி நகரத்தின் பிற அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் மக்கள் உட்பட மாநகரசபை உறுப்பினர்களும், 

மாநகரசபையின் கட்டடத்தை கட்ட வேண்டுமென பிரயத்தனம் மேற்கொண்டதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், மாநகரசபை கட்டடத்தை கட்ட வேண்டுமென தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அந்தவகையில், அனைவரினதும் எண்ணங்கள் இன்று நிறைவேறியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பல பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும், காலதாமதமாக சரி மாநகரசபை கட்டடத்தைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கட்டடத்திற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. எமது தலைவர்களின் முயற்சியினால், மாநகரசபை கட்டடம் கட்டுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனவே, நாங்கள் இழந்த பல அபிவிருத்தி திட்டங்களை உரியவர்களுடன் பேசி, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து ஒரு வரலாற்று நகரமாகவும், 

தமிழர்களின் நகரமாகவும் வடிவமைக்க அயராது உழைப்போம் என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு