அமைச்சா் மனோகணேசனுக்கு யாழில் கௌரவிப்பு விழா..

ஆசிரியர் - Editor I
அமைச்சா் மனோகணேசனுக்கு யாழில் கௌரவிப்பு விழா..

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமயஅலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மணோகணேசனைக் கௌரவிக்கும் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பல்வேறு இடங்களுக்கும்  சென்று பல நிகழ்வுகளில்  கலந்து கொண்டுள்ளார். 

இதற்கமைய அமைச்சருக்கு கௌரவிக்கும்  நிகழ்வு வடமராட்சி தெற்கு  மேற்கு பிரதேச சபையான கரவெட்டி பிரதேச சபையில்  பிரதேச சபைத் தவிசாளர்  ஐங்கரன்தலைமையில் இன்று புதன்கிழமை  நடைபெற்றது. 

இதன் போது  மங்களவாத்தியங்களுடன் மாலைகள் அணிவித்து  வரவேற்கப்பட்டுபொன்னாடைகள் அணிவித்தும்  நினைவுப் 

பரிசில்கள் வழங்கியும்கௌரவிக்கப்பட்டார்.  இந் நிகழ்வில் அரசியல்  பிரமுகர்கள் அரச அதிகாரிகள்  பொது மக்கள் எனப்  பலரும்கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு