வலி,வடக்கில் படையினாின் கட்டுப்பாட்டில் உள்ள கீாிமலை பகுதி விடுவிக்கப்படும், ஜனாதிபதியுடன் பேசுவேன் என்கிறாா் அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கில் படையினாின் கட்டுப்பாட்டில் உள்ள கீாிமலை பகுதி விடுவிக்கப்படும், ஜனாதிபதியுடன் பேசுவேன் என்கிறாா் அங்கஜன்..

வலி வடக்கு பிரதேசத்தின் விடுவிக்கப்பட வேண்டியிருக்கும் நிலப்பரப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இரமாநாதன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பகுதியின் முன்பள்ளி,சனசமூக நிலையங்கள் ஆகியவற்றிற்கு 2018 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் திட்டங்களுக்கான, பொருட்கள் வழங்கலுடன் , நிறைவு பெற்ற நிர்மாண , புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு, 

மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போது, இடம்பெற்ற கலந்துரையாடலில் நீண்டகாலமாக இடம் பெயர்ந்து தற்காலிகமாக சிரமத்தின் மத்தியில் வசித்து வருவதுடன் , தமது நீண்டநெடுங்கால கோரிக்கையை சாதகமான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி 

மக்களுக்காக அவற்றினை மீண்டும் பரிசீலிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மக்களுடன் இணைந்து இன்று மாலை கீரிமலை பூர்வீக நிலப்பகுதியின் 

எல்லைப்பகுதிக்கு நேரடியாக கள விஜயம் செய்து பார்வையிட்டிருந்தார். பூர்வீகமாக வழிபட்ட விஷ்ணு ஆலயம், பாரம்பரியமான சுடுகாட்டு பகுதியும் பூர்வீக கீரிமலை பிரதேசத்தினுள் காணப்படுவதாக தெரிவித்து மக்கள் தமது கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.

பொன்னாலை பருத்தித்துறை வீதியின் 2 கிலோ மீற்றர்கள் மக்கள் பாவனை இன்றியும், முக்கியமானதாக குடும்பங்களின் குடியிருப்பு பகுதிகளும் அவற்றினுள் உள்ளடங்குவதாக வருகை தந்திருந்த மக்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

காணிகளை விடுவிக்குமாறு மக்களின் பிரஸ்தாபிப்பு மற்றும் பிரசன்னத்திற்கு மத்தியில் ஜனாதிபதியுடன் கதைத்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் உறுதியளித்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு