இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாம், நீதிமன்றில் உளறிய பொலிஸாா்..
கேப்பாபிலவு மக்களுடைய காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக முள்ளியவ ளை பொலிஸாா் முல்லைத்தீவு நீதிமன்றில் கூறியிருக்கின்றனா்.
பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் இரு பெண்கள் மீது
முள்ளியவளைப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று நடைபெற்றன.
அதன்போது, கேப்பாபிலவுக் காணிகளுக்கான இழப்பீடுகளை வாங்கிக் கொண்டு இவர்கள் போராட்டம் செய்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
போராடும் மக்களில் 14 பேருக்கு அவர்களுடைய காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் மீண்டும் போராடுகின்றனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
அப்போது, பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்குப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பானது.
அதில் இந்த விடயங்கள் பற்றிப் பேசமுடியாது. காணிப்பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசவேண்டும்.
இங்கு தொடரப்பட்ட வழக்குத் தொடர்பிலே பேசவேண்டும் என்று நீதிவான் பொலிஸாரை எச்சரித்தார்.