28 வருடங்களின் பின்னா் காங்கேசன்துறையில் எாிபொருள் நிரப்பு நிலையம்..

ஆசிரியர் - Editor I
28 வருடங்களின் பின்னா் காங்கேசன்துறையில் எாிபொருள் நிரப்பு நிலையம்..

இரானுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு மீளகுடியேற்றம் செய்யப்பட்ட வருகின்ற காங்கே சன்துறை பிரதேசத்தில் 28 வருடங்களில் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையத்தை வலிகாம்ம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவசிறி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் எரிபொருள் சேவைகளையும் ஆரம்பித்து வைத்தார்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக விலகாமல் வடக்கு மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு தங்களது நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன் பின்னர் பல ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும், முகாமகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இந் நிலையில் அந்த மக்களின் காணிகள் தற்போது படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. அந்த மக்களின் தேவைகளில் ஒன்றாக கருதப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த எரிபொருள் நிரப்பு நிலையமானது கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இரானுவக் கட்டுப்பாட்டில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய ஏற்கனவே இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மீளப் புனரமைத்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பெற்றோலிய கூட்டுத் தாபன அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு