மக்களுக்கு நல்லது செய்ய முயற்சித்தால் சிலா் குழப்புவாா்களாம்..?

ஆசிரியர் - Editor I
மக்களுக்கு நல்லது செய்ய முயற்சித்தால் சிலா் குழப்புவாா்களாம்..?

பொது மக்களுக்கு நல்லவை நடக்கப் போகின்றது என்றால் அதனைக் குழப்ப சிலர் எத்தனிப்பார்கள். ஆகவே அவற்றையெல்லாம் கடந்து மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் புனரமைக்கப்பட்ட எரிபொருள் நிலையில் கடந்த 28 வருடங்களின் பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

எமது பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இந்தப் பிரதேச மக்கள் இடம்பெயரந்த பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்ததுடன் சொத்துக்கள் இழப்புக்கள் அழிவுகளை எதிர்கொண்டார்கள் என்பது உண்மை தான். 

ஆனால் தற்போது இந்தப் பிரதேச காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.  தற்போது இப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான நிலையில் பல வருடங்களின் பின்னராக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.  ஆனாலும் இதனை மீள ஆரம்பிப்பதற்கு பாரிய சவலாக்ளும் தடைகளும் ஏற்பட்டிருந்த போதும் 

அவற்றையெல்லாம் தாண்டி மக்களுக்ககா பலரும் செயற்பட்டதால் அதன் பயன் இன்றைக்கு மக்களைச் சென்றடைய இருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால் மக்களுக்கு நல்லது நடக்கப் போகின்றதென்றால் அதனைக் குழப்ப சிலர் எத்தனிப்பார்கள். 

மேலும் இந்த எரிபொருள் நிலையத்தை மீள திறப்பதில் பல போட்டிகள் காணப்பட்டன. ஆனால் அதனையும் தாண்ட வேண்டியது மிக அவசியம். அவ்வாறே பல தடைகளையும் தாண்டி மக்களுக்காக பணிகளை பலரும் முன்னெடுத்து வருகின்றனர். 

இதே வேளை இந்தப் பிரதேசத்தில் பல்வெறு அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதே போன்றே எதிர்கால நடவடிக்கைகளயிலும் பல அபிவிருத்திகளை இங்கு முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 குறிப்பாக விரைவில் தொழிற்சாலைகள் பலவும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. அதனூடாக வேலைவாய்ப்புக்கள் முதல் பல பிரச்சனைகளுக்குத் தீர்வைக்காண முடியுமென்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு