யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிாிழப்போாின் உடலை கொண்டு செல்ல வாகனம், புலம்பெயா் தமிழா்கள் உதவி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிாிழப்போாின் உடலை கொண்டு செல்ல வாகனம், புலம்பெயா் தமிழா்கள் உதவி..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்கும் பாமர மக்களின் உடலை எரிபொருள் செலவுடன் மட்டும் விநியோகிக்கும் ஓர் திட்டத்திற்காக முதல் கட்டமாக ஒரு வாகனம் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய சாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலை என்பதன் அடிப்படையில் ஏ னைய மாவட்ட  வைத்தியசாலைகளில் இருந்தும் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். 

இவ்வாறு அனுமதிக்கப்படுபவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி மரணமும் சம்பவிக்கின்றது. அவ்வாறு ம்ணமடையும் ஏனைய மாவட்டத்தவர்கள் மற்றும் குடாநாட்டின் பின் தங்கிய பிரதே சத்தை சேர்ந்தவர்கள் தமது மரணித்த உறவின் உடலை கொண்டு செல்வதற்காக அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலமையில் உள்ளனர். 

இதனால் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிக்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட வர்களிற்கு மட்டும் எரிபொருள் செலவை மட்டும் செலுத்தி உடலை எடுத்துச் செல்லும் வாய்ப் பினை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக பெயம்பெயர்ந்து வாழும் கனடா வாழ் உறவுகள் நிதி உதவியை வழங்கியுள்ளனர்.

அந்த நிதியில் இருந்து ஒரு வாகனம் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாகவே இந்தப் பணியை ஆரம்பிக்க முடியும். இந்தச் சேவையினை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் பெரும் பணியாற்றியிருந்தார் . இதன் காரணமாக குறித்த சேவைக்கும் அவரே பொறுப்பாக இருப்பார்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு உயிரிழப்போரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக வசதியற்ற உறவுகள் அதிக நிதிச் செலவிலான வாகன வசதியை நாடவேண்டிய தேவை இருக்காது. 

இச் சேவையின் கீழ் வாகனத்தை பெற விரும்புபவர்கள் என்னிடமோ அல்லது சட்ட வைத்திய அதிகாரியான மயூரதனையோ நாட முடியும். என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு