யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கம்பங்களை நாட்டுவோா் எவராக இருந்தாலும் நடவடிக்கை.. நகர முதல்வா் எச்சாிக்கை.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கம்பங்களை நாட்டுவோா் எவராக இருந்தாலும் நடவடிக்கை.. நகர முதல்வா் எச்சாிக்கை.

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைப் பிரதேசத்தில் இ.மி.சபை மற்றும் தொலைத் தொடர்பு நிலை யம். ஆகிய இரண்டு அரச நிறுவனம் தவிர்ந்த  ஏனையவற்றின்  கம்பங்கள் நாட்டப்பட்டிருப்பின் அ து தொடர்பில் உரிய நடைமுறைக்கேற்ப அனுமதிகள் பெறப்படாதுவிடின் கண்டிப்பாக அகற்றப்ப டும் என மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் எல்லைப் பரப்பிற்குள் சபையின் ஆரம்பத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ சபையின் அனுமதியின்றி கம்பங்களை எந்தவொரு தனியார் நிறுவனமும் நாட்டமுடியாது. அதில் எந்தவகையான கேபிள் இணைப்பு சேவை நிறுவனமானாலும் முறைப்படி விண்ணப்பித்து சபையின் ஆராய்விற்குப் பின்னர் மக்க

ளிற்கு பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டால அது தொடர்பில் பரிசீலிக்கப்படும். அவ்வாறான பரிசீலனையின் பின்பு சபைக்குரிய வரியினைச் செலுத்தி முறைப்படியான அனுமதியினைப் பெற் ற பின்பே கம்பங்கள் நாட்ட முடியும். எனவே அனுமதி இன்றி நாட்டிய எந்த நிறுவனமானாலும் உட ன் மாநகர சபையுடன் உரிய முறையில் தொடர்பு கொண்டு 

அதற்கான விண்ணப்பத்தை செய்து நிறுவனத்தை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக காங்கேச ன்துறை வீதியில் யாழில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும்போது வலது புறத்தில் ஒ ரு நிறுவனம் கம்பங்களை நாட்டி சேவை வழங்குவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உரியவர்கள் உரிய முறையிலான அனுமதியை பெற்றுக்கொள்ளத் 

தவறினால் அந்த வீதியில் நாட்டப்பட்டுள்ள மின் கம்பங்களும் பிடுங்கி அகற்றப்படும். இதனால் மாநகர சபையின் எல்லைப் பகுதியில் குறித்த விடயத்தில் சட்டத்தினை இறுக்கமாகவே கடைப்பி டிக்கப்படும். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு