SuperTopAds

முல்லைத்தீவு- செம்மலை விகாரை விவகாரம் பௌத்த பிக்குவை நீதிமன்றில் ஆஜயராகுமாறு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- செம்மலை விகாரை விவகாரம் பௌத்த பிக்குவை நீதிமன்றில் ஆஜயராகுமாறு பணிப்பு..

முல்லைத்தீவு- நாயாறு நீராவியடி ஏற்றம் பகுதியில் உள்ள பிள்ளையாா் ஆலயத்தில் வழிபாட்டுக்கு சென்ற மக்களை தடுத்து நிறுத்தியமை மற்றும் குழப்பம் விளைவித்தமை தொடா்பில் பௌத்த பிக்குவையும், ஆல ய நிா்வாகத்தையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது. 

கடந்த 14.01.18 அன்று முல்லைத்தீவு நாயாற்றுபகுதியில் உள்ள நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் செம் மலை கிராம மக்கள் வழிபாடு பூசைகள் நடத்தசென்ற வேளை அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைத்து குடியிருக்கும் பௌத்த துறவியும் தெற்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள் 

மற்றும் தென்பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்களும் அங்கு சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட தமிழ் மக்களுடன் முறுகலில் ஈடுபட்டு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவி டாது தடுத்தனர் .

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிசார் சம்பவ நிகழ்வு அனைத்தினையும் ஒ ளிப்படம் எடுத்துள்ளதுடன்,செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாலர்களையும் புகைப்படம் எடுத்திருந்த னர் . மேலும் முறுகல் நிலை வலுப்பெறாத வகையில்  

வழிபாடுகளை தமிழ் மக்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர் . இதனையடுத்து தொடர்ந்து அன்றையதினம்  தமிழ் மக்கள் நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைத்துள்ள விகாரையில்   சமாதானத்திற்கு குலைவு ஏற்படுத்தியமை தொடர்பில் நாயாறு குருகந்த புராதன விகாரை யில் பௌத்த இந்து வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் 

81 ஆம் பிரிவின் கீழ் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியினால் மாவட்ட நீதிமன் றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரனைக்கு வருமாறு முதலாம் தரப்பு நபராக பௌத்த துறவியினையும் 

இரண்டாம் தரப்பு நபராக தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன், ஆலய நிர்வாகிகளான க.பாஸ்கரன், மு.குகதாஸ் ஆகியவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முல் லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றால் அழைப்பாணை அனுப்பிவைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கினை இரண்டாம் தரப்பு வாதிகளான நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வா கத்தினரால் அவசர தன்மை கருதி முன்னகர்த்தல் பத்திரம் ஊடாக (22.01.19) இன்று நீதிமன்றில் விசாரணை க்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு 

அமைவாக குறித்த வழக்கு விசாரணை 22.01.19 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது  முதன்னிலை சட்டத்தரணியான அன்ரன் புனிதநாயகம் 

உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு  ஆதரவாக மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன்போது ஏற்கனவே புராதனமாக இருந்த நீராவியடிப்பிள்ளையார் 

ஆலயத்தின் பெயரினை அங்கு இருக்கும் பௌத்த துறவி கணதேவி தேவாலய என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பொலிசாரால் சரியாக உரியமுறையில் விசாரணை செய்யப்படவில்லை.  

இதன் பின்னர் மீண்டும் வழிபாட்டுக்காக அங்கு சென்ற மக்களுடன் பௌத்த பிக்கு முரண்பட்டதன் அடிப்படையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த  14 ஆம் திகதி பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற மக்களுக்கு பௌத்த பிக்குவால் ஏற்படுத்தப்பட்ட இடையூறு தொடர்பிலான புகைப்படங்களுடன் மற்றும் குறித்த பௌத்த விகாரை சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது 

என்பதற்கான தகவல் அறியும் சட்டம் மூலம் கோரப்பட்டு கரைதுறைப்பற்று  பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட விபரங்கள் என்பனவும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வழக்கினை விரைவு படுத்தி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டத்தரணிகளால் மன்றுக்கு  தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை (24.01.19) நாளை மறுதினம்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் அன்றைய தினம் முதலாம் தரப்பான பௌத்த பிக்குவினையும் மன்றில் முன்னிலையாகுமாறு  பணிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தாமாக முன்வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் உண்மைத்தன்மை நிலமை தொடர்பில் நீதிமன்றுக்கு தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் அனைவருக்கும் 

நீரவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.