இலஞ்சம் வாங்கினால் எந்த அதிகாாி மீதும் நடவடிக்கை, துணிந்து களத்தில் இறங்கிய யாழ்.மாவட்டச் செயலா்..

ஆசிரியர் - Editor I
இலஞ்சம் வாங்கினால் எந்த அதிகாாி மீதும் நடவடிக்கை, துணிந்து களத்தில் இறங்கிய யாழ்.மாவட்டச் செயலா்..

யாழ்.மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாாிகால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த சந்தா்ப்பத்திலும் த ன்னை சந்தித்து உாிய நீதியை பெறுவதற்கு முயற்சிக்கலாம். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபா் பகிரங்க கருத்து ஒன்றை முன்வைத்துள்ளாா். 

குடாநாட்டு நிர்வாகத்தில் சில தாமதங்கள் ஏற்படின் அதனை நிவர்த்திக்க முடியும். ஆனால் எந்த துறையிலும் எவரும் லஞ்ச நடைமுறையினை ஏற்படுத்த அனுமதிக்கவே முடியாது. அந்த விடயத்தி ல் முகவும் இறுக்கமான நடவடிக்கையே பின்பற்றப்படும். 

அரசினால் வழங்கும் எந்தவொரு சேவைக்கும் எந்த உத்தியோகத்தரும் மக்களிடம் இருந்து பணத் தை எதிர்பார்க்க முடியாது. மாறாக எந்த அதிகாரியோ அல்லது கிராம சேவகர்களோ எந்தவிதமா ன ஒரு நடவடிக்கைக்காகவும் பணம் கோரினால் உடன் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம்.

அதேநேரம் ஒரு அதிகாரி அல்லது கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாட்டை தெரிவித்தால் பின்பு அவரிடம் எவ்வாறு சேவையை பெறச் செல்ல முடியும் என்ற தயக்கமோ அல்லது அச்சமோ தேவையில்லை. 

ஏனெனில் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தை உறுதி செய்யும் வரையில் எவர் மூலம் தகவல் கிடைத்தது என்பது வெளியில் தெரியாத வண்ணமே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோ ம். சம்பவம் உறுதி செய்யப்பட்டதும் அமைச்சின் அனுமதி வருவதற்கு முன்பே 

மாவட்டச் செயலாளருக்கு உரிய அதிகாரத்தின் பிரகாரம் குறித்த உத்தியோகத்தர் உடனடியாக இ டமாற்றப்படுவார். அந்த வகையில் எந்தவொரு பொதுமக்களும் அச்சம் தேவையில்லை. எழுத்தில் வழங்கத் தயக்கம் இருந்தால் நேரிலும் தெரிவிக்கலாம். 

அண்மையில் இறுதியாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துன் கிராம சேவகர் தொடர்பில் செய் யப்பட்ட முறைப்பாடு உண்மை எனக் கண்டமையினால் தற்போது அவரை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளோம்.

அவ்வாறு பணியில் இருந்து இடைநிறுத்திய உத்தியோகத்தரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என அமைச்சிற்கும் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு