SuperTopAds

'தேசிய போதைத்தடுப்பு பாடசாலை வாரம்' நிகழ்வு முல்லைத்தீவில். ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஆசிரியர் - Editor I
'தேசிய போதைத்தடுப்பு பாடசாலை வாரம்' நிகழ்வு முல்லைத்தீவில். ஜனாதிபதி கலந்துகொண்டார்.


தேசிய போதைத்தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வானது 21.01.2019 இன்றைய நாள் முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் போதை தடுப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்களும், நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியால் அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள், வடக்குமாகாண ஆளுனர் சுரேன் ராகவன், மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, அங்கஜன் ராமநாதன், ஆகியோருடன் பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.