நிலமீட்பு போராட்டம் நடாத்திவரும் கேப்பாபிலவு மக்களை சந்தித்த புதிய ஆளுநர்..

முல்லைத்தீவு- கேப்பாபிலவு கிராமத்தை தங்களிடம் மீள வழங்குமாறு கேட்டு தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் கேப்பாபிலவு மக்களை புதிய ஆளுநர் சுரேன் ராவகன் சந்தித்து பேசியுள்ளார்.
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கேப்பாபிலவு மக்களை சந்தி த்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் மக்களுடைய கோரிக்கைள் தொடர்பில் புதிய ஆளுநர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.