கை விரிக்கிறது ஐ.தே.கட்சி அரசு, தேள் கொட்டிய திருடனின் நிலையில் கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
கை விரிக்கிறது ஐ.தே.கட்சி அரசு, தேள் கொட்டிய திருடனின் நிலையில் கூட்டமைப்பு..

புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றல் 3ல் 2 பெரும்பான்மை கிடைக்குமா? என்பது சந்தேகம் என கூறி யிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஒன்றும் செய்ய மு டியாது எனவும் கூறியிருக்கின்றார். 

காலியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்இ

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் அடங்கிய அறிக்கை குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவை யோசனைகள் மாத்திரமே. அரசியலமைப்புக்கான வரைவு இன்னமுமும் தயாரிக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரு்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதனை நிறைவேற்ற முடியாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த முனையவில்லை.

புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே ஐதேகவின் நிலைப்பாடு. நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையைப் பாதுகாக்க எந்தத் திட்டத்தை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம்.

இதேவேளை புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்றார்.

புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை என்று பிரதமர் குறிப்பிட்டதன் மூலமாக அரசியலமைப்பு மாற்றமானது சாத்தியமற்ற ஒன்று என்று அவர் மறைமுகமாகச் சொல்லியுள்ளார் 

என அவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு