ரயில் மோதி இறந்தவரை அடையாளம் காண உதவியது ஆறாவது விரல்!

ஆசிரியர் - Admin
ரயில் மோதி இறந்தவரை அடையாளம் காண உதவியது ஆறாவது விரல்!

நாவற்குழியில் ரயில் மோதி உயிரிழந்தவர், காலில் இருந்த மேலதிக விரலின் மூலம், அடையாளம் காணப்பட்டார். நாவற்குழி ரயில் பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்றவரை நேற்று பி.ப.2.00 மணிக்கு கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியது. கால்கள் மற்றும் முகம் ஆகியன சிதைந்த நிலையில் அவரது சடலம் நாவற்குழி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் சடலத்தை ஒப்படைத்தனர். 

அதன் பின்னர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் உயிரிழந்தவர் அணிந்திருந்த சாரத்தைக் கொண்டு வீடு வீடாகச் சென்றதில், இன்று காலை சாவகச்சேரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த அவரது மனைவி சடலத்தின் காலில் மேலதிக விரல் காணப்பட்டதையடுத்து உயிரிழந்தவர் தனது கணவர் என உறுதிப்படுத்தினார். நாவற்குop 300 வீட்டுத் திட்டப் பகுதியைச் சேர்ந்த யோசப் கிங்ஸ்லி ( வயது 41 ) என்பவரே உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு