இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் வழங்க பேரம் பேசும் அரச ஊழியர்கள் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் வழங்க பேரம் பேசும் அரச ஊழியர்கள் சிக்கினர்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்து இறப்பவர்களின் உடலை வெளியே கொண்டு செல்வதற்கு வாகன உரிமையாளர்கள், சவ பெட்டி விற்பனையாளர்களிடம் பேரம் பேசி இடைத்தரகர் வே லை பார்ப்பவர்கள் 4 பேரை கட்டாய விடுமுறையில் அனுப்ப வைத்தியசாலை நிர்வாகம் சுகாதார அமைச் சுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்படும் சடலங்களை உறவுகளிடம் ஒப்படைப்பதற்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் இறந்தவர்களின் உறவினர்களிடம் வைத்தியசாலையின் சில பணியாளர்கள் உடலைக் கொண்டு செல்வதற்கு 

குறைந்த விலையில் சவப்பெட்டியினையும் கொண்டு செல்வதற்குமான வாகன வசதியினையும் ஏற்படுத்தி தருவதாக கூறி தமக்கு இசைவான வர்த்தகர்களிடம் அனுப்பி வைத்து அதன் மூலம் தரகுப் பணம் பெற்று வந்த செயலை வைத்தியசாலை நிர்வாகம் கண்டுள்ளது.

இதனை ஆராய்ந்த சமயம் அச் செயலில் நால்வர் தொடர்ச்சியாக ஈடுபடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த நால்வரையும் கட்டாய ஓய்வில் அனுப்புமாறு மத்திய சுகாதார அமைச்சிற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

பாமர மக்களின் சேவையே வைத்தியசாலையின் மிக முக்கியம் என்பதனால் முன்பும் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்பும் இவ்வாறு ஈடுபட்டதாக கண்டறியப்பட்டதனால் அவர்களின் குடும்ப நிலமையினைக் கருத்தில் கொண்டு இவ்வாறு சிபார்சு செய்யப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து இறந்தவர்களின் உடலை வெளியே கொண்டு செல்வதற்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் சவ பெட்டி விற்பனையாளர்களுடன் பேரம் பேசும் தொடர்பை பேணிய  குற்றச் சாட்டில்  நால்வரை கட்டாய விடுமுறையில் அனுப்ப வைத்தியசாலை நிர்வாகத்தினால் 

சுகாதார அமைச்சிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு