நிவாரண பொருட்களை ஒளித்த விவகாரம், பருத்துறை நகரசபையின் பிரதி தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது..

ஆசிரியர் - Editor I
நிவாரண பொருட்களை ஒளித்த விவகாரம், பருத்துறை நகரசபையின் பிரதி தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர்க்கப்பட்ட உத விப் பொருட்களை தனது அலுமாரிக்குள் ஒளித்து வைத்த குற்றச்சாட்டு, 

பருத்துறை நகரசபையின் பிரதி தவிசாளருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 6 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

வெள்ள நிவாரண பொருட்கள் தொடர்பான சர்ச்சைகளையடுத்து உபதலைவரிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராய்வதற்காக இன்று (17) மாலை 4 மணிக்கு கூடிய பருத்தித்துறை நகரசபையின் விசேட அமர்விலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ள நிவாரணப்பொருட்களில் மோசடி நடந்தது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. நகரசபை உபதலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்திருந்தார்கள்.

இதை ஆராய்வதற்காக இன்று கூடிய விசேட கூட்டத்தில்இ பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, சுயேட்சை அணி, ஈ.பி.டி.பி கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனடிப்படையில் உபதலைவரிற்கு எதிரான தீர்மானம் மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய விசேட அமர்விற்கு உபதலைவர் சமூகமளித்திருக்கவில்லை. சுகவீனம் காரணமென சபைக்கு அறிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு