SuperTopAds

இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து 1201 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து 1201 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுகிறது..

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினரிடம் உள்ள சுமார் 1201 ஏக்கர் காணி ம க்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. 

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, 

யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும் முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் 

பொது மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதுடன்இ யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.