வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.. உண்மையை அம்பலப்படுத்திய நா.உ சிறீதரன்..
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதில் அரசும், தென்னிலங்கை யிலிருந்து வரும் அதிகாரிகளும் மாற்றான்தாய் மனப்பான்மையில் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பின் பின்னான நிலமைகள் குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார். இ து தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத் தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் சுமார் 25281 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து நிலமைகளை நேரில் பார்வையிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன் ற உறுப்பினர்கள் என சகலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் இழப்பீடு மற்று ம் நிவாரணத்தை வழங்குங்கள், வழங்கவேண்டும். என கூறியிருந்தார்கள். ஆனாலும் தற்போது
நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அவர்களுடைய கருத்துக்களுக்கு அல்லது உத்தரவுகளுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குதென கூறப்பட்டது. காரணம் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ம க்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்லும்போது உண்டாகியிருக்கும் சேதங்களை ஈடுசெய்வதற்கும்
அந்த மக்கள் தம்மை ஓரளவுக்கு சுதாகரித்துக் கொள்வதற்குமாக அந்த பணம் மற்றும் ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். என கூறப்பட்டது. அதனை சகலரும் ஏற்றுக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் சுமார் 2 ஆயிரம் வரையான குடும்பங்களுக்கே 10 ஆ யிரம் ரூபாய் இழப்பீட்டை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதிலும் அரைவாசி
குடும்பங்களுக்கே அந்த 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். மேலும் நெல் பூக்கும் பருவத்திலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு உண்டாகியிருந்த து. அதனால் பெருமளவு அழிவு உண்டாகியுள்ளது. குறிப்பாக சுமார் 40 தொடக்கம் 50 மூடைக ள் ஒரு ஏக்கருக்கு விளையும் நிலத்தில் இந்த அறுவடையில் 16 தொடக்கம் 20 மூடை நெல்லே
அறுபடையாக கிடைத்துள்ளதாக விவசாயிகள் எமக்கு கூறுகின்றனர். ஆனால் விவசாய அழிவுக ளை மதிப்பீடு செய்யவரும் அதிகாரிகள் வயலுக்குள் இறங்காமல் நெல் நன்றாக விளைந்திருப்ப தாக பல இடங்களில் கூறியுள்ளார்கள். நெல் பார்ப்பதற்கு நான்றாக இருப்பதுபோல் தெரியும். ஆ னால் ஒரு நெல்மணியை பிடுங்கி அதனை விரலால் நசுக்கினால்தான் உண்மை தெரியும்.
அதாவது பூக்கும் பருவத்தில் வெள்ளம் பாதித்ததால் அரிசி உருவாகாமல் வெறும் சப்பிகளே உருவாகியுள்ளது. அது வெளியில் இருந்து பார்த்தால் வயல் நன்றாக விளைந்திருப்பதுபோல் இருக்கும். ஆகவே அதனை கூர்மையாக அவதானித்து பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் என்ற அக்கறை தென்னிலங்கையிலிருந்து வந்திருக்கும் அழிவுகளை
மதிப்பீடு செய்யும் அதிகாரிகளுக்கு இருப்பதாக இல்லை. ஆக மொத்தத்தில் கிளிநொச்சி மாவ ட்டத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவி திட்டமு ம் இல்லை. விவசாய அழிவுகளுக்கு இழப்பீடுகளும் இல்லை. மக்கள் வெறும் 1500 ரூபாய் உல ர் உணவு நிவாரணத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பியிருக்கின்றார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இயங்கும் அனத்தமுகாமைத்துவ பிரிவும் மக்களுடைய இந்த நிலைக்கு ஒரு காரணம். அவர்களுடைய வினைத்திறன் அற்ற மந்த நிலையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உண்மையான பாதிப்பு நிலமை வெளிப்படுத்தப்படவில்லை. மேலும் வெள்ளம் பா திக்கப்பட்ட பகுதிகளில் இருந்த நிலமைகள் குறித்த ஆவணப்படுத்தலும் இல்லை.
இதனால் தென்னிலங்கையில் இருந்து மதிப்பீட்டுக்காக வருகிறவர்கள் விவசாயிகள் சொல்வதை கேட்காமல் அவர்கள் சொல்வதை விவசாயிகள் கேட்கும் நிலைக்கு தள்ளியிருக்கின்றது. மேலும் வெள்ளத்தி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருப்படியாக கிடைத்தது வீட்டு திட்டம் மட்டும்தான். அதாவது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 388 வீடுகள் பூரணமாகவும், 2225 வீடுகள் பகுதியளவிலும்
சேதமடைந்தது. இவற்றில் பூரணமாக சேதமடைந்த வீடுகளை தலா 7 அரை லட்சம் ரூபாய் செலவி ல் மீண்டும் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வீடமைப்பு அமைச்சு கடந்த 12ம் திகதி ஆரம்பித்துள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.