லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினால் கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்..
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாணவர்கள் 525 பேருக்கு லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் ஐந்து லட்சம் ரூபா நிதிபங்களிப்புடன் ரி.டி.ஒ நிறுவனத்தின் ஊடக கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்இகிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனின் ஏற்பாட்டில் இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதன் போது வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் லண்டன் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் பிரதிநிதி எஸ்.கனகலிங்கம் ஆகியோரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
ஆனைவிழுந்தான் குளம் அ.த.க பாடசாலைஇவன்னேரிக்குளம் மகா வித்தியாலயம்இஐயனார் புரம் அ.த.கபாடசாலை மற்றும் மணியன்குளம்இவிநாயகர் குடியிருப்பிணை சேர்ந்த 525 மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளைஇகரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.