வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை ஜனாதிபதியின் சிறந்த தெரிவு என்கிறார் நாக விகாரை விகாராதிபதி..

ஆசிரியர் - Editor I
வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை ஜனாதிபதியின் சிறந்த தெரிவு என்கிறார் நாக விகாரை விகாராதிபதி..

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்திற்கு எடுத்துக் காட்டாகும் என யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி மிகஹாஜ்துரே விமல தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்இ வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார்.

அவர் யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து யாழ் ஆயரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். நல்லூர் கந்தசாமி கோயில் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆகியவற்றுக்கு சென்ற ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு