போாினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவியிலும் இலஞ்சம் பெற்ற ஈனப்பிறவி கைது..

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா விநியோகத்தின்போது லஞ்சம் பெற்ற பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தி னம் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தான பெண் உத்தியோகத்தர் ஒருவர் பயணாளி களிடம் ஒரு லட்சம் ரூபாவிற்கான காசோலையை வழங்கும்போது 15 ஆயிரம் ரொக்கப் பணம் லஞ்சமாக கோரப்படவுள் ளதாக பயணாளி ஒருவரினால்
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவ்வாறு இலஞ்சப் பணத்தினை பி்தேச செ யலகம் முன்பாக உள்ள ஓர் தேநீர் கடையில் வைத்தே வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செ ல்லப்படது. இதனை அடுத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர்
கொழும்பில் இருந்து பொலிசார் சகிதம் மறைந்திருந்துள்ளனர். இதேநேரம் குறித்த தேநீர்ச் சாலையிலும் இரு உத்தியோக த்தர்கள் சிவில் உடையில் வழிப்போக்கர்கள் போன்று தேநீர் அருந்தியுள்ளனர். இதன்போது ஓர் பயணாளிக்கான காசோ லைக்குரிய லஞ்சப்பணத்தினை தேநீர்ச் சாலையில் வைத்து
பயணாளி வழங்கும் சமயம் ஆணைக்குழு அதிகாரிகள் புகைப்பட ஆதாரங்கள் சகிதம் கையும் களவுமாக பிடித்துள்ளன ர். இதனையடுத்து குறித்த பெண் உத்தியோகத்தர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொண்டு செ ல்லபட்டுள்ளார்.
குறித்த ஊழியர் நீண்ட காலம் திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றி 4 மாதங்களின் முன்பே பூநகரி பிரதேச செய லகத்திற்கு இடமாற்றம் பெற்று வருகை தந்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
இவ்வாறு லஞ்சம் பெற்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதனை உறுதி செய்தார்.