நாயில் இனங்காணப்பட்ட அபாயகரமான நோய் தாக்கம் குறித்து முதற்கட்ட ஆய்வுகள் நிறைவு..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயில் இனம் கானப்பட்டதான ட்றைபனசோமா என்னும் நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் 8 நாய்களின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.
என முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி கௌரிதிலகன் தெரிவித்தார். இலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில் நாய்களில் அடையாளங் காணப்பட்டது. இந்தநோய் மனி தர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல தெரிவித்த கூற்றின் பிரகாரம் விசேட ஆய்விற்காக குறித்த குழுவினர் நேற்றைய தினம் முல்லைத்தீவிற்கு வருகை தந்திருந்தனர். . இது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளி த்தார்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவில் குறித்த ட்றைபனசோம என்று சந்தேகிக்கப்படும் நோய் நாய்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் . இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாகம் கூறப்பட்டது. அவ்வாறு இனம்கானப்பட்ட நாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் முகத்துவாரம் பிரதேசத்திலேயே இனம் கண்டுகொள்ளப்பட்டது.
அவ்வாறு குறித்த நோய் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நாய் தற்போது இறந்து விட்டது. அதேநேரம் அந்த நாய் வளர்க்கப்பட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமாக கானப்பட்ட 8 நாய்களின் இரத்த மாதிரியும் ஆய்விற்காக பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு தற்போது பெற்றுச் செல்லும் இரத்த மாதிரிகளின்
ஆய்வு அறிக்கை விரைவில் எமக்குத் அனுப்பி வைக்கப்படும் . அவை கிடைக்கப்பெற்ற பின்பே குறித்த நிலமை தொடர்பில் நூறுவீதமாக உறுதி செய்ய முடியும் என்றார்.