SuperTopAds

பட்டதாாி ஆசிாியா்களுக்கான நியமனம் வழங்கலில் குழறுபடி, சளாப்பும் அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
பட்டதாாி ஆசிாியா்களுக்கான நியமனம் வழங்கலில் குழறுபடி, சளாப்பும் அதிகாாிகள்..

வடமாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி காரணமாக எமக்கான  நியமனம் வழங்குவதில் தா மதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்  சுட்டிக் காட்டுகின்றனர்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித , விஞ்ஞான , தொழில்நுட்ப பாடங்களிற்காக பட்டதாரிகளி டம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

அவ்வாறு கோரப்பட்ட விண்ணப்பங்கள் காணப்படும் வெற்றிடங்களிலும் விட குறைவாக கானப்பட்டதனால் எழுத்துப் பரீட்சை இல்லை. நேரடியாகவே நேர்முகப் பரீட்சை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வடமாகாண சபை இல்லாத காரணத்தினால் வடமாகாண ஆளுநரின் அனுமதி பெற்று இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினர். 

இதன் அடிப்படையில் சுமார் 400 வெற்றிடங்கள் உள்ள நிலையில் 300 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தபோது டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் பட்டியலில் புதிதாக பட்டம் பெற்று வெளியேறிய நிலையில் ஸ்ரேட்மன் வழங்கப்படாத 34 பட்டதாரிகளும் உள் வாங்கப்பட்டதனால் 

அவர்களிற்கான சான்றிதழ் வழங்கப்படும் வரையில் காலம் கடத்த முற்பட்டமையினால் ஏற்கனவே சான்றிதழ் பெற்ற 270ற்கும் மேற்பட்ட பட்டதாரிகளிற்பும் நியமனம் கிடைக்கவில்லை. 

எனச் சுட்டிக்காட்டப்படுகின்றமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீல னைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

உறுதிப் படுத்தல் சான்றிதழை கையில் பெற்றுக்கொள்ளாத 34 பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் அவர்களினை தவிர்த்து ஏனையவர்களிற்கு வழங்க முற்பட்டபோதும் வழங்கப்படவில்லை. 

இதனால் இதற்கான அனுமதியை பெற்று உரிய முறையில் நியமனம் வழங்க ஆவண செய்யப்படும். என்றார்.