வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேகாிக்கப்பட் பொருட்கள் பருத்துறை நகரசபை பிரதி தவிசாளாின் அலுமாாிக்குள்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேகாிக்கப்பட் பொருட்கள் பருத்துறை நகரசபை பிரதி தவிசாளாின் அலுமாாிக்குள்..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகாிக்கப்பட்ட பொருட்கள் சில பருத்துறை நகரசபையின் பிரதி தவிசாளருடைய அலுவலக அலுமாாிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதி தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமா்பிப்பதற்கு எதிா்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளதாக தொியவருகின்றது. 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணப் பொருட்களை பருத்தித்துறை நகரசபை சேகரித்தது. இந்த பொருட்கள் பொதி செய்யப்பட்டசமயத்தில், 

உபதலைவர் அலுவலக அறைக்குள்ளும் பொதி செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட சில பொருட்கள் உபதலைவரின் லுவலக அலுமாரிக்குள் இருந்து எடுக்கப்பட்டது.

இதையடுத்து வெள்ள நிவாரணத்தில் மோசடி இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை ஆராய்வதற் காக கடந்த 9ம் திகதி விசேட அமர்வு கூட்டப்பட்டது. 

இதில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை உபதலைவர் மறுத்தார். அலுமாரிக்குள் உதவிப்பொருட்கள் எப்படி வந்ததென்பது தனக்கு தெரியாதென்றும், 

தனது விளக்கத்தையளிக்க இரண்டு நாள் அவகாசம் தருமாறும் கோரினார். இந்த நிலையில் நேற்று தனது விளக்கத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

தனது அலுமாரிக்குள் அந்த பொருட்கள் எப்படி வந்ததென்பது தனக்கு தெரியாதென்றும், இந்த விவகாரத்தில் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், எதிர்க்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை நேற்று சமர்ப்பித்தனர். இதில் பத்து உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகரசபையிலுள்ள 15 மொத்த உறுப்பினர்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களை தவிர, ஏனைய கட்சி உறுப்பினர்கள்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 

ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலை கூட்டணி, சுயேட்சை அணி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தை ஆராய்வதற்காக நாளை மறுதினம் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு