SuperTopAds

தை பொங்கலை புறக்கணித்து உறவுகளை தேடி கண்ணீருடன் வீதியில் இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்..

ஆசிரியர் - Editor I
தை பொங்கலை புறக்கணித்து உறவுகளை தேடி கண்ணீருடன் வீதியில் இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்..

தமிழா் வாழும் பகுதிகளில் எல்லாம் உழவா் திருநாளான தை பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் வவுனியாவில் கா ணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனா். 

வவுனியாவில் இன்றுடன் 694 நாள்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மதியம் 12 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகளை மேற்கொண்டதுடன் பசார் வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்குச் சென்றனர்

இதன்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.