புதிய அரசியலமைப்பை எதிா்ப்பவா்கள் உத்தமா்கள் அல்ல. இந்த நாட்டை நாசமாக்கியவா்கள் அவா்கள்தான். பிரதமா் ரணில் காட்டம்..

ஆசிரியர் - Editor I
புதிய அரசியலமைப்பை எதிா்ப்பவா்கள் உத்தமா்கள் அல்ல. இந்த நாட்டை நாசமாக்கியவா்கள் அவா்கள்தான். பிரதமா் ரணில் காட்டம்..

புதிய அரசியலமைப்புக்கு எதிராக கூக்குரல் இடுபவா்கள் இந்த நாட்டை நாசமாக்கிய பாதகா்கள். அவா்கள் ஒன்றும் உத்த மா்கள் அல்ல என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா். 

நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அவர்கள் கொலைகாரர்கள், ஊழல்வாதிகள். குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கடந்த காலங்களில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.

இப்படியானவர்களின் மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அடிபணியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சூழ்ச்சியை முறியடித்து நான் மீண்டும் பிரதமராகுவேன் 

என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் நான் மீண்டும் பிரதமரானேன்.

தமிழ் மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாகவே நான் இருக்கின்றேன். என்னை நம்பும் அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். இந்த நாட்டில் மூவின மக்களும் 

சமவுரிமையுடன் சமாதானமாக - ஒற்றுமையாக வாழ வேண்டுமெனில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

இதைப் புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக் கொடுப்பேன். இது எனது பிரதான கடமை. நான் மீண்டும் பிரதமராகி ஆற்றிய உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன்.

வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். நாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம்.

மீண்டும் ஒரு குடும்ப ஆட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு நாம் இடமளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு