கிளாலியில் 3.1மில்லின் ரூபா செலவில் பொதுநோக்கு மண்டபம் பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..
கிளாலி கிராமமானது நடந்து முடிந்த போரின் சாட்சியாக தனது அனைத்து உட்கட்டமைப்புக்களையும் இழந்து எந்தவொரு வசதி மேம்பாடும் அற்ற நிலையில் அந்த கிராம மக்கள் தொடர்ச்சியாக பலத்த அசௌகரியங்களை எதிர் நோக்கி வாழ்ந்து வந்தனர்.
இருந்தாலும் அந்த மக்களின் வாழ்வியலில் விரைவாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிய எமது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை கிளாலி கிராமம் நோக்கி நகர்த்தி விட்டார்.
குறிப்பாக கிளாலி பிரதான வீதி திருத்தம்,ஐயனார் கோவில் வீதி திருத்தம், முன்பள்ளி வீதி திருத்தம் மற்றும் பாடசாலைக்கு சுற்று மதில் அமைத்தல் ,தற்போது கிளாலி கடற்றொழிலாளர் சமாசத்திற்கான ஒரு பொதுநோக்கு மண்டபமும் அமைய இருப்பதுடன் மேலும் பல
அபிவிருத்தி திட்டங்களும் மிக குறுகிய காலத்தில் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. எனவே கிளாலி கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பொதுநோக்கு மண்டபம் அமையவிருக்கும் இடத்தினை பார்வையிட்டார்.
இந்த பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்களான த.றமேஸ், வே.கோகுலறாஐ், கி.வீரவாகு தேவர் ஆகியோருடன் கடற்றொழிலாளர் சங்கங்களின சமாசத் தலைவர் செல்லா அவர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் உடனிருந்தனர்.