வெளிநாடு சென்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார்..

ஆசிரியர் - Editor I
வெளிநாடு சென்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார்..

வலி. வடக்குப் பிரதேச சபையில் இருந்து விடுமுறை அனுமதி இன்றிச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதில் ஆட்சேபனை இல்லை என தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவித்துள்ளார்.

வலி. வடக்கில் உறுப்பினராக உள்ள கோபிநாத் சபைநில் சுகயீன விடுமுறை என அறிவித்த நிலையில் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு தற்போது தனது பதவிவிலகலை யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டிற்குச் சென்றவர் கடந்த நவம்பர் மாதம் பயணித்த நிலையில் தற்போது 3 மாதம் கடந்து தொடர்ச்சியாக 3 மாதங்கள் முறையான அனுமதியோ அல்லது 

வெளிநாடு ஒன்றிற்கு உள்ளூராட்சி உறுப்பினர் வெளிநாட்டிற்கு அனுமதி இன்றிப் பயணித்தால் உறுப்புறுமை இழக்க கூடும் என்ற நிலையில் குறித்த உறுப்பினர் தானாகவே 

பதவி விலக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் வெற்றிடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு