துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பலட்சம் பெறுமதியான நகைள் மற்றும் பணம் கொள்ளை அக்கராயனில் பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பலட்சம் பெறுமதியான நகைள் மற்றும் பணம் கொள்ளை அக்கராயனில் பயங்கரம்..

கிளிநொச்சி- அக்கராயன் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நேற்று அதிகாலை கைத்  துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டு உரிமையாளர்களை கழுத்தில் வாள்  வைத்து அச்சுறுத்தி பல லட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

அக்கராயன் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் கிளிநொச்சியில் உள்ள வங்கியொன்றில் நேற்று முன்தினம் 2 லட்சம். ரூபா பணத்தை எடுத்துச் சென்ற மூர்த்தி அதனை தனது பயன்பாட்டிற்காக வீட்டில் வைத்திருந்த சமயம் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் முகங்கதை மூடிக்கட்டிய நால்வர் 

வளவிற்குள் நுழைந்து வீட்டின் வெளியில் உள்ள முகப்பு பகுதியில்  படுத்துறங்கிய தாயார் மூலம் வீட்டின் உள்ளே  இருந்தவர்களை அழைத்து கதவை திறந்துள்ளனர். இதன்போது சடுதியாக உள் நுழைத்த கொள்ளையர்கள் கைத் துப்பாக்கி மூலம் வீட்டின் உரிமையாளரை தலையில் தாக்கியுள்ளனர். 

அதனையடுத்து  வாள் முனையில் அச்சுறுத்தி கைகளைக் கட்டிய பின்பு கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் இருந்தவர்க ளை நகரவிடாது ஒருவர் உரிமையாளரின் கழுத்தில் வாள் வைத்திருக்க மற்றுமொருவர் கைத்துப்பாக்கியுடன் நின்று ள்ளார். இதன்போது வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் 

இன்று வங்கியில் எடுத்து வந்த பணம் எங்கே எனக் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். அதனால் வங்கியில் எடுத்த 2 லட்சம் ரூபா பணம் இருந்த இடத்தினையும் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதன் பின்பு வீட்டில் இருந்த 3 கைத் தொலைபேசிகள் வங்கி அட்டைகள் என்பனவற்றையும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் வீட்டில் நின்ற 

இரு மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு இரண்டாவது மோட்டார் சைக்கிளின் சில்லை சேதம் ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சேதமேற்படுத்திய சம்பவங்களினால் வீட்டாருக்கு சுமார் 15 லட்சத்திற்பும் மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ள அதே நேரம் குறித்த வீட்டிற்குள் 

சுமார் ஒரு மணிநேரம் கொள்ளையர்கள் நின்றுள்ளனர்  குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிசாருக்கு மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு