இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறினால் நாடு பேரழிவை சந்திக்கும் சபையில் எச்சரித்தார் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறினால் நாடு பேரழிவை சந்திக்கும் சபையில் எச்சரித்தார் சுமந்திரன்..

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதல் தடவையாக அரசியலமைப்பு தயாரிக்கும் நடவடிக்கையில் தமிழ் மக் களுடைய பிரதிநிதிகளின் பங்களிப்பு காணப்படுகின்றது.

இது இந்த நாட்டுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். இதனை இலங்கையில் உள்ள இரு பிரதான கட்சிகளும் தவற விடுமாக  இருந்தால் நாடு பேரழிவை சந்திக்கும். 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சுதந்திரம் அடைந்த பின்னர் முதற் தடவையாக அரசியலமைப்புச் செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சியொன்று பங்கெடுத்துள்ளது என சிலர் சபையில் சுட்டிக்காட்டினர். 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை அர்ப்பணிப்புடன் பணியாற்றும் எனவும் தெரிவித்தார். 

Radio
×