SuperTopAds

காணாமல்போன தன் மகனை 10 வருடங்களாக தேடி அலைந்த தாய் உயிாிழந்தாா், சோகத்தில் உறையும் முல்லைத்தீவு..

ஆசிரியர் - Editor I
காணாமல்போன தன் மகனை 10 வருடங்களாக தேடி அலைந்த தாய் உயிாிழந்தாா், சோகத்தில் உறையும் முல்லைத்தீவு..

2009ம் ஆண்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வைத்து இராணுவத்தினால் கைது செய் யப்பட்டு பின்னா் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த 10 வருடங்களாக தேடி அ லைந்த முல்லைத்தீவு தேவிபுரம் “அ” பகுதியை சோ்ந்த 68வயதான ச.விஜயலட்சுமி என்ற தாய் இறுதிவரை தன் மகனை காணாமல் உயிாிழந்துள்ளாா். 

2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராடடங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார். 

மகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார். வடக்கு கிழக்கு பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் இவருடன் சேர்த்து 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 674-ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.