யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி

ஆசிரியர் - Editor II
யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி

பாறுக் ஷிஹான்  

பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று(8) யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும்இமேற்படி யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

யாழ்.அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை யமீலா(வயது-24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு