பொது இடத்தில் குப்பை கொட்டும் போது சிக்கியவா்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
பொது இடத்தில் குப்பை கொட்டும் போது சிக்கியவா்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் பொறுப்பற்ற விதமாக குப்பை கொட்டிக் கொண்டிருந்தபோது மடக் கி பிடிக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 20 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் தண்டம் விதித்துள்ளது. 

யாழ்ப்பாணம் மாநாகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கழிவுகளை வீசுவதால் பெரும் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக சுட்டிக்காட்டது.

கடந்த 27 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் பலர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். ஒரே நாளில் 22 பேர் வாகனங்களுடன் சிக்கினர். அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 22 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு